வடக்கில் மத சுதந்திரம் இருக்கிறதா..! சபையில் சரத் வீரசேகர ஆவேசம்
வெடுக்குநாறிமலையில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் பொதிந்துள்ளன. வெடுக்குநாறி மலையில் இருந்த பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது, நாங்கள் வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்,மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில்,
"வெடுக்குநாறி மலை விவகாரத்தை குறிப்பிட்டுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்கள், தெற்கில் உள்ள மத சுதந்திரம் வடக்குக்கும் வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்,வடக்கில் மத சுதந்திரம் உள்ளதா ? என்பதை முதலில் ஆராய வேண்டும்." என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |