பௌத்தர்கள் சட்டத்தைக் கையில் எடுப்பார்கள் - சரத் வீரசேகர எச்சரிக்கை!
"பௌத்த மதத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பௌத்தர்கள் சட்டத்தைக் கையில் எடுக்க நேரிடும்."
இவ்வாறு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எச்சரிக்கை
தொடர்ந்து அவர்,
"பௌத்த மதத்தை அவமதிப்பதும், பின்னர் மன்னிப்புக்கோருவதும் நாட்டில் வழமையான செயற்பாடொன்றாக மாறியுள்ளது.
பௌத்தத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக கடுமையாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறானவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பாரியளவில் பணங்கள் கிடைக்கின்றன, அதுபோல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கும் டிக்கட்டுக்கள் வழங்கப்படுகின்றன.
இவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படவில்லை என்றால் பௌத்தர்கள் இவர்களை தண்டிப்பார்கள்.
பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்.
பணத்துக்காக பௌத்தத்தை அவமதிப்பவர்கள் தங்களது பெற்றோர்களைக் காட்டிக்கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்." என சரத் வீரசேகர கடுமையாக சாடியுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும், மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்.
