இந்திய தூதுவருடன் முக்கிய பேச்சில் ஈடுபட்டுள்ள சரத்வீரசேகர
இலங்கையில் இருந்து ஆயுதமேந்திய குழுவொன்று இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கிறது என்று வெளிவந்த கருத்து தொடர்பில் அடுத்த வாரம் பாதுகாப்பு சபையில் கலந்துரையாடப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த வாரம் இது குறித்து பாதுகாப்பு பேரவையில் ஆராயவுள்ளதால் தற்போது இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக வெளியான ஊடக தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகருடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினர் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினர் தாக்குகின்றனர் என இந்திய மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர் அதேவேளை அவர்கள் 800-900 படகுகளில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைகின்றனர் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
