பிரபாகரனுக்கு சிலை வைக்கும் நடவடிக்கை : அநுர தரப்பு விளக்கம்

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Ramalingam Chandrasekar
By Raghav May 23, 2025 12:15 AM GMT
Report

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமே இவை  என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (22.05.2025) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷண ராஜகருணா எம்பி தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார்.

யாழில் சோகம் : உணவருந்திக் கொண்டிருந்த யுவதி திடீர் மரணம்

யாழில் சோகம் : உணவருந்திக் கொண்டிருந்த யுவதி திடீர் மரணம்

பிரபாகரனுக்கு சிலை

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக நான் சபையில் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா எம்.பி அதனை அவருக்குக் கூறியதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார். 

பிரபாகரனுக்கு சிலை வைக்கும் நடவடிக்கை : அநுர தரப்பு விளக்கம் | Ramalingam Chandrasekhar S Speech In Parliament

எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறு எதனையும் கூறவில்லை. எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர. நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன். அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும் உணர்வுகளும் என்றும் எனக்குள் இருக்கின்றன.

அதேபோன்று 89 ஆம் ஆண்டு மரணமடைந்த பெருமளவானோர் உள்ளனர். அவர்கள் இன்றும் எமது உள்ளத்தில் நிலைத்திருக்கின்றனர்.

அவ்வாறு எங்கள் அனைவருக்கும் தலைமைத்துவம் வழங்கிய எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட நான் இதுவரை எங்கும் கூறியதில்லை. 

ஆயுள் தண்டனையில் தப்பிய பிள்ளையான்: TMVPயின் இராணுவ பிரிவு - தேடும் புலனாய்வுத் துறை

ஆயுள் தண்டனையில் தப்பிய பிள்ளையான்: TMVPயின் இராணுவ பிரிவு - தேடும் புலனாய்வுத் துறை

தேசிய மக்கள் சக்தி

அவ்வாறான நான் வேறு ஒருவருக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா? அந்த வகையில் மேற்படி கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

பிரபாகரனுக்கு சிலை வைக்கும் நடவடிக்கை : அநுர தரப்பு விளக்கம் | Ramalingam Chandrasekhar S Speech In Parliament

எதிர்க்கட்சியினர் கூறுவதற்கு எதுவும் இல்லாமல் இந்தளவு அடிமட்டத்திற்கு சென்றுள்ளனர் என்பது தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.

இந்த நாட்டில் மரணமடைந்தவர்கள் பாரிய அளவில் உள்ளனர். அவ்வாறு மரணமடைந்த அனைவருமே எமது சகோதரர்கள். அவர்களுக்காக நான் முன் நிற்பேனே தவிர, ஒரு நபர் அல்லது ஒரு தலைவருக்காக நான் முன்னிற்க மாட்டேன்.

பிரபாகரன் மட்டுமல்ல. உமா மகேஸ்வரன், சபாரெத்தினம் என பல தலைவர்கள் இருந்தனர். அவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காக சில கனவுகளை கண்டனர். எனினும் அவை தோல்வி கண்டன. 

அவர்கள் இறந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்காக நாம் முன்வந்துள்ளோம். அதனைத் தடுப்பதற்கும் மீண்டும் நாட்டில் இனவாதத்தை கொண்டு வருவதற்கும் அத்துடன் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபி தொடர்பில் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் முயற்சிக்கின்றனர். இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்தார்

பிள்ளையான் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு

பிள்ளையான் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு

மன்னார் கடற்கரையில் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு!

மன்னார் கடற்கரையில் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025