முல்லைத்தீவு நீதிபதியை கடுமையாக சாடும் சரத் வீரசேகர
எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியதன் பின்னர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் என்று நீதிபதி குறிப்பிடுவது முறையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(04) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம்
“முல்லைத்தீவு நீதிபதி மன அழுத்தத்தினால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளார். அவர் ஒரு பைத்தியம். அதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இதை நான் கூறவில்லை. நீதிபதியின் மனைவியே கூறியுள்ளார்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தனது வாகனத்தை விற்றுள்ளார். அத்துடன் மேற்குலக நாட்டின் இரு தூதுவர்களை சந்தித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால் என்னை கைது செய்திருக்கலாம். எனக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு." என்றார்.
மேற்படி சம்பவம் தொடர்பிலான மேலதிக விடயங்களை காணொளியின் ஊடாக காண்க.