தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கத்திற்கு கிடைத்த பதவி
நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களை கையாள்வதற்கான குழு, சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்தினவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
குழு உறுப்பினர்கள்
சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார, மருத்துவர் நிஹால் அபேசிங்ஹ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று (27) ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, இந்த குழுநிலை விவாதம் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 16 மணி நேரம் முன்
