மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
நாட்டில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இன்று (08) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி பால் மா, செத்தல் மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை குறைக்கப்பட்ட பொருட்கள்
1060 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் பால்மா 125 ரூபாவினால் குறைக்கப்பட்டு 935 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.
அத்துடன் 1190 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாய் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1175 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
200 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை அரிசி 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள 195 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.
ஒரு கிலோ வெள்ளை சீனி 3 ரூபாயால் குறைக்கப்பட்டு 272 ருபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |