சத்துருக்கொண்டான் படுகொலை அகழ்வாய்வு! மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
சத்துருக்கொண்டான் படுகொலை விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இருந்த இராணுவம் முகாம் உள்ளிட்ட இடங்கள் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பில் அதனை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்று (11.09.2026) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
பொய்ஸ் கார்டன் படைமுகாம்
இன்றைய அமர்வின்போது சத்துருக்கொண்டான் படுகொலையின் பிரதான பங்கினைக்கொண்ட சத்துருக்கொண்டான் பொய்ஸ் கார்டன் படைமுகாமில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறித்த படுகொலையின் பிரதான சூத்திரதாரிகளான படை பொறுப்பதிகாரி உட்பட அடையாளம் காணப்பட்ட படையினர் மீது நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தும் விசேட பிரேரணையொன்று மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதன்போது குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26