சீனி, பால் மாவின் விலையைக் குறைத்தது சதொச
Sri Lankan Peoples
Lanka Sathosa
By Vanan
வெள்ளைச் சீனி, பால் மா ஆகியவற்றின் விலையைக் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோக் கிராம் வெள்ளைச் சீனியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விபரம்
இதனை இன்று (15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 243 ரூபாவிற்கு நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 400 கிராம் பால் மாவின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1080 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி