அத்தியாவசியப் பொருட்கள் 12 இன் விலைகள் குறைப்பு - இன்று முதல் நடைமுறை
லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இன்று (23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
குறைக்கப்பட்டுள்ள 12 பொருட்களின் விலைகள் தொடர்பான முழு விபரம் வெளியாகியுள்ளன.
விலைகுறைப்பு விபரங்கள்
இதற்கமைய, பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலையை 40 ரூபாவினால் குறைத்துள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.
அத்துடன், பொன்னி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 194 ரூபாவாகும்.
அவ்வாறே, உருளைக்கிழங்கு (இறக்குமதி) கிலோவொன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இன்று காலை வெளியான அறிக்கை
சில அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.
லங்கா சதொச ஊடாக குறித்த அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.