மிதுன ராசிக்காரர்கள் சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் பணியிடத்தில் கூடுதல் அழுத்தத்தைச் சந்திக்க நேரிடலாம்.
இதனால் பணிச்சுமை அதிகரிக்கலாம்.
இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக சவால்களையும், எதிர்பாராத தடைகளையும் சந்திக்க நேரிடும்.
இந்த நேரத்தில் சவால்களை வெற்றிகரமாக முடிக்க எச்சரிக்கை மற்றும் கவனமாக திட்டமிடல் அவசியம்.
அலுவலகத்தில் சக ஊழியர்களால் அவர்கள் சில சூழ்ச்சிகளில் சிக்க நேரிடலாம் இதனால் குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை முடிக்க முடியாமல் போகலாம்.
வியாபாரத்தில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டுமே வரக்கூடியவை என்றாலும் லாபங்களை விட இழப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடும் இது மனச்சோர்வை ஏற்படுத்தும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளையும் நிதி நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடலாம்.
வேலை தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் இது மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
உங்கள் தொழில் வாழ்க்கையிலும் பல சவால்கள் இருக்கும்.
மேலும் மக்கள் உங்களிடமிருந்து அதிக வேலையை எதிர்பார்ப்பார்கள் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும்.
உங்கள் மேலதிகாரிகளுடன் சில முரண்பாடுகள் ஏற்படலாம் இதனால் நீங்கள் விரக்தியடைய நேரிடலாம்.
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சோதனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.
உங்களின் அனைத்து முயற்சிகளிலும் சில தடைகளை ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானமாக அடியெடுத்து வைக்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சனிபகவானின் இந்த வக்ர பெயர்ச்சியால் குடும்பப் பொறுப்புகள், தொழில் விஷயங்கள் மற்றும் வீடு அல்லது சொத்து தொடர்பான பிரச்சனைகளில் அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும்.
குடும்பத் தேவைகள் அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகள் முக்கியமான தொழில் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் எனவே கவனமாகச் செயல்படுவது அவசியம்.
அவர்கள் இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம்.
அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது.
அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.
இல்லையெனில் அது அவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.