ஆர்ஜென்டினாவுக்கு எதிராக சவூதி அசத்தல் வெற்றி - வெற்றியைக் கொண்டாட விடுமுறை அறிவிப்பு

Saudi Arabia Argentina
By Vanan Nov 22, 2022 05:57 PM GMT
Report

ஆர்ஜென்டினாவுக்கு எதிரான தேசிய அணியின் ஆச்சரியமான வெற்றியைக் கொண்டாடுவதற்காக சவூதி அரேபியாவில் நாளை (புதன்கிழமை) அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை சவூதி அரேபிய அரசர் விடுத்துள்ளார்.

அரச மற்றும் தனியார் துறையின் அனைத்துத் துறை ஊழியர்களுக்கும், அனைத்துக் கல்வி நிலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பலப்பரீட்சை

ஆர்ஜென்டினாவுக்கு எதிராக சவூதி அசத்தல் வெற்றி - வெற்றியைக் கொண்டாட விடுமுறை அறிவிப்பு | Saudi King National Holiday Win Against Argentina

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆர்ஜென்டினாவும் சவுதி அரேபியாவும் இன்று பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

இந்தப் போட்டியின் முதல் பாதியின் 10 ஆவது நிமிடத்தில் கிடைத்த பனால்ட்டி வாய்ப்பை கோலாக்கிய ஆர்ஜென்டினா, முதல் பாதியில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆர்ஜென்டினா போட்ட மூன்று கோல்கள் விதிமுறைகளை மீறியது என்ற அடிப்படையில் நடுவரால் நிராகரிக்கப்பட்டிருந்தன. எனினும் இரண்டாவது பாதியில் சுதாகரித்து விளையாடிய சவுதி அரேபியா 48 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைப் போட்டு, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியது.

புள்ளிகள் பட்டியலில் முதலிடம்

ஆர்ஜென்டினாவுக்கு எதிராக சவூதி அசத்தல் வெற்றி - வெற்றியைக் கொண்டாட விடுமுறை அறிவிப்பு | Saudi King National Holiday Win Against Argentina

தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய சவுதி அரேபியா 53 ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோலைப் போட்டு, ஆர்ஜென்டினாவிற்கு அதிர்ச்சி அளித்தது.

இதன்பிரகாரம் 2 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் சவுதி அரேபியா முன்னிலை பெற்றிருந்த நிலையில், இறுதி வரை மேலதிக கோலை போடும் ஆர்ஜென்டினா அணியின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

போட்டியின் இறுதியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற சவுதி அரேபிய அணி சி குழுவிற்கான புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவின் வெற்றி உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026