விடுதலைப் புலிகளை சார்ந்தவன் என்றால் எனக்கு பெருமிதமே : வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட காணொளி
நாங்கள் எங்கள் தமிழினத்தை திருப்பியும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவோம் என சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள காணொளி பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை மருத்துவ சங்கத்தை சார்ந்த சில சிங்கள மருத்துவர்கள் நான் எனது மக்கள் என கூறியதை பிழையாக விளங்கிய நிலையில் அதற்கு நான் தெளிவாக பதிலளித்துள்ளேன்.
நீங்கள் என்னை விடுதலை புலிகளை சார்ந்தவன் எனக்கூறுவது எனக்கு பெருமிதம் அத்தோடு நான் அங்கிருந்து வளர்ந்து வந்தவன்.
அத்தோடு, என் சமூகத்தில் இறந்தவர்களுடன் நானும் இணைந்துகொள்கின்றேன் இதற்காக என்னை கைது செய்வீர்களாக இருந்தால் அதுவும் எனக்கு பெருமிதம்.
வேலையை விட்டு விலகுவதாக முடிவெடுத்தால் அதற்கான பதவி விலகல் கடித்தத்தில் நான் கையெழுத்திட தயார் அத்தோடு என்னுடன் படித்த சிங்கள வைத்தியர்களில் யாராவது என்னை கெட்டவன் என்று சொன்னால் நான் தூக்கிட்டு தற்கொலை செய்ய தயார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 8 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்