11 கோடி லீட்டர் எரிபொருள் சேமிப்பு : அரச நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு
அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில்,அரச நிறுவனங்களின் வாகனங்களைப் பயன்படுத்தி எரிபொருளைச் எவ்வாறு சேமிப்பது என கூறப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம், பி. கே. பிரபாத் சந்திர கீர்த்தி, அரசதுறையில் தற்போது 92,000 வாகனங்கள் இயங்கும் நிலையில் உள்ளதாகவும், அந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் எரிபொருளைச் சேமித்தால், ஒரு நாளைக்கு மொத்தம் 92,000 லிட்டர் எரிபொருளைச் சேமிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆண்டுக்கு சுமார் 11 கோடி லீட்டர் எரிபொருளைச் சேமிக்க வாய்ப்பு
மேலும், இதன் மூலம் மாதத்திற்கு 92 லட்சம் லிட்டரும், ஆண்டுக்கு சுமார் 11 கோடி லிட்டரும் எரிபொருளைச் சேமிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம், பி. கே. பிரபாத் சந்திர கீர்த்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர்களுக்குத் தெரிவித்து, நிறுவன அளவில் எரிபொருளைச் சேமிப்பதற்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 50 நிமிடங்கள் முன்