எரிபொருள் நெருக்கடி : சீமெந்தின் விலையும் அதிகரிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
Cement Price in Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sathangani
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையின் காரணமாக ஒரு மூட்டை சீமெந்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒரு மூட்டை சிமெந்தின் விலை சுமார் 175 ரூபாய் அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சந்தையில் ஒரு மூட்டை சீமெந்து தற்போது 2,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விலை
மேலும் தற்போதைய நெருக்கடியின் காரணமாக மணல் மற்றும் கல் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த நெருக்கடி நிலைமையினால் எரிபொருள் விலை, போக்குவரத்து கட்டணங்கள், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை உள்ளிட்ட பலவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்