ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
புதிய இணைப்பு
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (24) காலை 11.00 மணி முதல் மீண்டும் அனைத்துப் பொதுச் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று (23) ஏற்பட்ட இந்தக் கணனி அமைப்புக் கோளாறு காரணமாக, இன்றைய தினம் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்தநிலையில், இன்று காலை முதல் பெருமளவிலான மக்கள் திணைக்கள வளாகத்தில் குவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த திணைக்களத்தின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை விநியோகம்
இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை விரைவில் சரிசெய்து, பொதுச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |