கொலம்பியாவில் விழுந்து நொருங்கிய C-130 ஹெர்குலஸ் விமானம்: 66- ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
கொலம்பிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ் (Hercules) ராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளாானதில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு கொலம்பியாவின் புடுமாயோ (Putumayo) மாநிலத்தில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ (Puerto Leguízamo) நகரிலிருந்துநேற்று (மார்ச் 23, 2026) பயணத்தை ஆரம்பித்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானம் அமெரிக்காவிடமிருந்து 2020-ல் பெறப்பட்டது என்றும், பராமரிப்பு சரியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
66 பேர் பலி
விமானத்தில் மொத்தம் 121 முதல் 125 பேர் இருந்ததாகவும், (பெரும்பாலும் இராணுவ வீரர்கள் — சுமார் 110-114 பேர், மற்றும் 11 குழுவினர்), இதில் விபத்தில் குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறந்தவர்களில் 58 பேர் தரைப்படை வீரர்கள், 6 பேர் விமானப்படை உறுப்பினர்கள், 2 பேர் பாதுகாப்பு அதிகாரிகள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் 57 பேர் காயமடைந்துள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எனினும் விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |