முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதியினால் உதவித் திட்டம் வழங்கிவைப்பு
யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் உதவித் திட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டு யுத்தம் முடிந்தபின் அரசாங்கத்திடம் சரணடைந்து நீண்டகாலமாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் போராளிகளுக்கு யாழ். தனியார் விடுதியில் இந்த உதவித் திட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் முயற்சியின் பயனாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகேந்திரனின் நிதிப் பங்களிப்பில் 15 முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகேந்திரனின் நிதி பங்களிப்பில் இவ் உதவித் திட்டம் வழங்கி வைக்கப்படுள்ளது.
உதவித்தட்டம் வழங்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, பலாலி இராணுவ கட்டளை தலைமையக உயரதிகாரிகள் யாழ் இராணுவ படைப்பிரிவுகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.


