சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு பணம்: வட்டி வீதங்கள் தொடர்பில் ரணிலின் பணிப்புரை
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு (60 வயதிற்கு மேற்பட்டவர்கள்) வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya)தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்காக சுமார் 80 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பணத்திற்காக 105 பில்லியன் ரூபா கடனை திறைசேரியிலிருந்து செலுத்த உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பணப்புழக்கம்
இதேவேளை, இந்த விடயத்தில் அதிபர் மிகவும் அக்கறையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் செயற்பட்டு வருவதாகவும், பல்வேறு வயதினருக்கான வட்டி விகிதங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் கூறியுள்ளார்.
அத்தோடு, நாட்டில் தற்போது நிலவும் பணப்புழக்கங்கள் தொடர்பில் தெளிவான அறிக்கையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |