ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
செவித்திறன் குறைபாடுகள், ஒரு கண்ணில் பார்வை இழப்பு மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த முன்னோடித் திட்டம் 2022 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் தொடங்கப்பட்டதாகவும் அந்தக் காலகட்டத்தில் எந்த விபத்துகளும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.
சிறப்பு சின்னம்
இதற்கிடையில், இந்த உரிமங்கள் ஒவ்வொரு இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அந்த நபர் தங்கள் பெயரில் ஒரு வாகனத்தை வைத்திருக்க வேண்டும், உரிமமானது, மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் வழங்கப்பட்டதை தெளிவாகக் காட்டும் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, பொது அடையாளத்திற்காக வாகனத்தின் முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் ஒரு சிறப்பு சின்னம் காட்டப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
