உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Grade 05 Scholarship examination
By Jaso Aug 06, 2026 11:47 AM GMT
Report

பேரிடர் சூழ்நிலை எதுவும் இல்லாததால், உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்புடன் நேற்று (05) நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வானிலை மாற்றங்கள் எதுவுமில்லை 

பரீட்சைகளுக்காக திட்டமிடப்பட்ட திகதிகளில் சிறப்பு வானிலை மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கும் எந்த வானிலை முன்னறிவிப்புகளும் தற்போது இல்லாததே இதற்கான முக்கிய காரணமாகும்.

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Scholarship And Al Exam To Be Held As Usual

புலமைப்பரிசில் பரீட்சை 09 ஆம் திகதியும் உயர்தர பரீட்சை 10 ஆம் திகதியும் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர் தரப் பரீட்சைக் காலப்பகுதியில் இடர்கள் குறித்து அறிவிப்பதற்காக 5 புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முப்படையினர் மற்றும் காவல்துறையின் தொடர்ச்சியான ஆதரவுடன் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் என நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

"அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் ஊடாக அனைத்து தரப்பினரையும் இணைத்து விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முன்னரும், பரீட்சை முடிவுற்ற பின்னரும் இந்தத் திட்டம் செயற்படும். ஏதேனும் இடர் நிலைமை ஏற்பட்டால், பிள்ளைகளைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வினாத்தாள்களைக் கொண்டு செல்லும் போதும் மற்றும் அதிகாரிகளுக்குக் கடமைகளைச் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு முந்தைய நாள் 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்படும். அத்துடன் 117 என்ற தொலைபேசி இலக்கமும் செயற்பாட்டில் உள்ளது. தொழில்நுட்ப அறிக்கைகள் 6 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையோ அல்லது 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையோ வழங்கப்படவுள்ளன. முப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்." என்றார்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை

பல்கலைக்கழக அனுமதி: மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பல்கலைக்கழக அனுமதி: மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்