உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்: வெளியான அறிவிப்பு

Ministry of Education Sri Lanka G.C.E. (O/L) Examination President of Sri lanka Education
By Sathangani May 15, 2024 06:16 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (G.C.E Ol Exam) தோற்றி தற்போது க.பொ.த. உயர்தரத்தில் (G.C.E Advanced Level) தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை (ICT) ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (Telecommunications Regulatory Commission Sri Lanka) மற்றும் சிறிலங்கா அதிபர் நிதியம் (President Fund) ஆகியவை ஒன்றிணைந்து வழங்கும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் 2024- 2025 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் நிதியம் வழங்கும் இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்துக்கு தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களையும் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் (A. Aravind Kumar) அறிவுறுத்தியுள்ளார்.

யாழில் அரச உத்தியோகத்தரின் முத்திரையை போலியாக தயாரித்து நிதி மோசடி

யாழில் அரச உத்தியோகத்தரின் முத்திரையை போலியாக தயாரித்து நிதி மோசடி

அதிபர் நிதியதிதிலிருந்து புலமைப்பரிசில்

இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''இலங்கையின் கல்வித்துறை மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தி பெற்று தற்போது க.பொ.த. உயர்தரத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகக் கொண்டு கற்கும் மாணவர்களுக்காக அதிபர் நிதியதிதிலிருந்து புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்: வெளியான அறிவிப்பு | Scholarship For Students Studying It In A Level

இத்திட்டமானது க.பொ.த. உயர்தரத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பாடமாகக் கொண்டு கற்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளது.

தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பிவைக்க வேண்டும்.

நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ள கொத்தணிப் பாடசாலைகள்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ள கொத்தணிப் பாடசாலைகள்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

விண்ணப்பதாரிக்குரிய தகுதிகள் 

குறித்த திட்டத்திற்கு தெரிவு செய்வதற்கு இருக்க வேண்டிய தகைமைகளாக பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் 100,000 ரூபாவுக்கும் மேற்படாதிருத்தலுடன் அரசாங்க பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன்/மாணவியாக இருத்தல் வேண்டும்.

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்: வெளியான அறிவிப்பு | Scholarship For Students Studying It In A Level

2022(2023) ஆம்ஆண்டு நடத்தப்பட்ட க.பொ.த. (சா.த) பரீட்சைக்கு தோற்றி க.பொ.த. (உ.த.) கற்பதற்கான முழுத் தகைமைகளையும் பெற்று க.பொ.த (உ.த.) கற்பதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவன்/மாணவியாக இருத்தல்.

அத்துடன் விண்ணப்பத்தை அதிபர் நிதியத்திக்கு பதிவுத்தபால் மூலம் மாத்திரம் அனுப்புதல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

மலையக மாணவர்கள்

இவ்விடயத்தில் அசட்டையாக இருக்காது தகுதிபெற்ற அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மலையக மாணவர்கள் இவ்விடயத்தில் அதிக அக்கறை காட்டல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை கல்வி இராஜாங்க அமைச்சரின் பதுளை,பண்டாரவளை, பசறை, மடுல்சீமை, லுணுகலை, எல்ல, அப்புத்தளை, உடப்புஸ்சல்லாவை ஆகிய காரியாலயங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்: வெளியான அறிவிப்பு | Scholarship For Students Studying It In A Level

அதேவேளை விண்ணப்பப் படிவங்களை இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். 

இத்திட்டத்தின் கீழ் சகலபாடசாலை அதிபர்கள் தங்களது பாடசாலையில் கற்கும் தகுதியுடைய மாணவர்களை, விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு'' கல்வி இராஜாங்க அமைச்சர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி செலுத்திய இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்திய இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022