வெளிநாடொன்றில் மாணவர்கள் மீது இடிந்து விழுந்த பாடசாலை கட்டிடம்: பலர் பரிதாப மரணம்
Nigeria
Weather
World
School Children
By Aadhithya
மத்திய நைஜீரியாவில் (Nigeria) பாடசாலை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்று (12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மத்திய நைஜீரியாவின் ஜோஸ் (Jos) மாநிலத்தில் உள்ள செயின்ட் அக்கடமி பாடசாலையிலுள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததால் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தொடர் மழை
குறிப்பாக, இந்த பாடசாலையில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும், பல மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் தெரியவராத போதிலும், குறித்த பகுதியில் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 45 நிமிடங்கள் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி