கல்வி அமைச்சர் முன்வைத்த கோரிக்கை!!
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
By Kanna
நாளை (20) முதல் பாடசாலைகளில் இணையவழிக் கல்வியை தொடர்வதற்கு ஆதரவளிக்குமாறு ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு வார காலத்திற்கு மூடப்படும் பாடசாலைகள்
எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சிரமம் காரணமாக கொழும்பு கல்வி வலயம் மற்றும் ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் நாளை (20) முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் உட்பட அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் முக்கிய நகரங்கள் அல்லாத நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி, ஒரு வாரத்திற்கு மூடப்படும் பாடசாலைகள்: வெளியாகிய அறிவித்தல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்