மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னலில் வீசிய சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மட்டக்களப்பு(Batticaloa) போதனா வைத்தியசாலையின் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவி மற்றும் மாணவியை கர்ப்பமாக்கிய காதலனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை நேற்று(28.02.2025) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் வயிற்றுவலி என தெரிவித்து அதிகாலை 3.30 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தையை பெற்ற மாணவி
இதையடுத்து, அவர் ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 5.00 மணிக்கு மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து யன்னல் வழியாக வீசியுள்ளார்.
இந்நிலையில், குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்ற நிலையில் மாணவி குழந்தையை பெற்றுள்ளார் என அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
அதன்போது, குழந்தையை மீட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளித்ததுடன் மாணவிக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்
