பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
Sinhala and Tamil New Year
Ministry of Education
Sri Lankan Schools
By Vanan
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டே இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம்
இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் மே 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.
அத்தோடு, மே 13 முதல் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மேலும் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மே 25 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி