இன்று பாடசாலை விடுமுறை ரத்து..! வெளியாகிய காரணம்
Ministry of Education
Sri Lankan Schools
By pavan
அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் (16) திங்கட் கிழமை விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தைப்பொங்கல் என்பதால், இன்று திங்கட் கிழமை (16) தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், மூன்றாம் தவணை விடுமுறை 3 கட்டங்களாக வழங்கப்பட்டு வருவதை கருத்திற்கொண்டு, இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
5ம் ஆண்டு நினைவஞ்சலி