கற்றல் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது..! கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
கற்றல் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது
எதிர்வரும் வாரம் பாடசாலை கற்றல் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பிலான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் 5ஆம் திகதி வரையான 5 நாட்களில் கடந்த வாரத்தைப் போன்று 3 நாட்களுக்கு மாத்திரம் பாடசாலை கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துறைசார் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன்கிழமைகளில் பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் அறிக்கை
அத்துடன் போக்குவரத்து பிரச்சினை இல்லாத பாடசாலைகளின் செயற்பாடுகளை புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் முன்னெடுப்பது தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசியர்களின் இணக்கப்பாட்டுடன் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கு அமைய தீர்மானிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
