பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியானது அறிவிப்பு
Sri Lankan Peoples
Sri Lankan Schools
By Dilakshan
2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நாளையுடன்(10) நிறைவடையவுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
குறித்த விடயமானது, கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 24.04.2024 அன்று முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் தொடங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை
அத்தோடு, அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி