பாடசாலை கட்டிடத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம் - பலியான மாணவன் தொடர்பில் தகவல்
புதிய இணைப்பு
பலாங்கொடை (Balangoda) பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கட்டிடத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் பலாங்கொட - ரஜவக்க மகா வித்தியாலயத்தில் 13 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கிவிர ஹிருஜா என தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று பலாங்கொட காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த மற்றொரு மாணவரின் நிலை மோசமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
பாடசாலை ஒன்றில் கட்டிடத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் இன்று (12) பிற்பகல் பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலையில் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் 16 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 17 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
        
        காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
19 மணி நேரம் முன் 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        