கொழும்பில் கோர விபத்து - பரிதாபமாக உயிரிழந்த 12 வயது சிறுமி
Colombo
Accident
By pavan
கொழும்பு கொஸ்பவை பகுதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற போது வீதியால் அதிவேகமாக வந்த மகிழுந்து ஒன்று அவரை மோதியுள்ளது.
வங்கி முகாமையாளர் கைது
விபத்தில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
காரின் சாரதியான தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
