பாடசாலை ஆசிரியை எடுத்த விபரீத முடிவு: விசாரணைகள் தீவிரம்
ஹோமாகம (Homagama), கொடகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை ஆசிரியை தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக மீகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதான ஹெனரத் ஆராச்சிலாகே புத்திக ரங்கனி யசரத்ன என்ற ஒரு பிள்ளையின் தாயான ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியையின் கணவர் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்று விட்டு வீடு திரும்பிய வேளை, ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன் படி, தென் கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி, குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஆசிரியரின் விபரீத முடிவிற்கான காரணமான தகவல்கள் எதுவும் வெளியாகாததால், முழுமையான பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |