மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (5) ஆரம்பமாகவுள்ளது.
உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இதையடுத்து, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
உயர்தர பரீட்சை
எனினும், உயர்தர விவசாய விஞ்ஞானப் பாடபட பரீட்சை வினாத்தாள் சமூக ஊடகங்களிவ் கசிந்ததை அடுத்து, குறித்த பரீட்சையை தற்காலிகமான நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
பாடசாலை ஆரம்பம்
இந்த நிலையில், பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாக இருந்த அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        