இடிந்து வீழ்ந்த பாடசாலை சுவர் : கல்வி நடவடிக்கைகள் குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானம்
கண்டி (Kandy) டி. எஸ். சேனநாயக்கா கல்லூரியின் பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பல வகுப்புக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (08) இரவு பெய்த கடும் மழையுடன் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பாடசாலையின் ஏனைய 27 வகுப்புகளும் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக பாடசாலை அதிபர் ஆனந்த உபதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான நிலைமை
அத்துடன் இந்தப் பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் உள்ள அனைத்து வகுப்புகளும், ஏனைய பல வகுப்புகளும் ஆபத்தான நிலைமையில் இருப்பதுடன் இன்று (09) இரவு கடும் மழை பெய்தால் மேலும் பல வகுப்புகள் பாதிக்கப்படலாம் எனவும் பாடசாலையின் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் தற்போதுள்ள அபாயம் குறித்து மத்திய மாகாண (Central Province) ஆளுநர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ளப்படும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |