கிளிநொச்சியில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு (காணொளி)
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையில் காரணமாக கிளிநொச்சியில் கடும் மழை பெய்து வருகிறது, இதனால் பாடசாலைகள் மற்றும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்புகுள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் ஒரு சிலர் எங்கு செல்வது என்று தெரியாமல் நிர்க்கதியான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைகளுக்கு விடுமுறை
இதேபோன்று தர்மபுரம் மத்திய கல்லுரி மற்றும் தருமபுரம் இலக்கம் ஒன்று பாடசாலைகளுக்குள் மழைநீர் உற்புகுந்துள்ளது.
இதனால் இன்றைய தினம் (15) குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாக கிராம சேவையாளர் இப் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது