திங்கள் முதல் மீள ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்! போக்குவரத்து அமைச்சருக்கு ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள பணிப்புரை
ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சிறிலங்கா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களிலும் இன்று பிற்பகல் 3.00 மணி முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சருக்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்தவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்