துருக்கியின் பேரழிவை இந்தியாவும் சந்திக்கும் - எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்..!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8000ஐ தாண்டி இருக்கும் நிலையில், அதை 3 நாட்களுக்கு முன்பே கணித்த நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர், இந்தியாவிலும் இதேபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
துருக்கியின் மத்திய மற்றும் தெற்கு பகுதியிலும் சிரியாவிலும் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், இதில் 5,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து இருக்கின்றனர்.
நேற்று முன்தினம் 7.8 என்ற ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவான நிலையில், 2 வது நிலநடுக்கம் 7.5 என்ற ரிக்டர் அளவிலும், 3 வது நிலநடுக்கம் 6 என்ற ரிக்டர் அளவிலும் பதிவாகி பேரழிவுகளை ஏற்படுத்தின.
பேரழிவு
பல முறை நில அதிர்வுகள் துருக்கியில் ஏற்பட்டு வருகிறது. இன்றும் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. நிலநடுக்கத்தால் அடுத்தடுத்து கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கங்களின் தாக்கம் அண்டை நாடான சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்து இருக்கிறனர்.
ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது. கட்டிடங்கள் இடிந்தும் நகரங்கள் உருக்குலைந்தும் காணப்படுகின்றன.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Sooner or later there will be a ~M 7.5 #earthquake in this region (South-Central Turkey, Jordan, Syria, Lebanon). #deprem pic.twitter.com/6CcSnjJmCV
— Frank Hoogerbeets (@hogrbe) February 3, 2023
இதுவரை 8000க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதியே இப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என துல்லியமாக கணித்து உள்ளார் .
SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில், "கூடிய விரைவிலோ அல்லது தாமதமாகவோ மத்திய - தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும்." என்று பதிவிட்டு இருந்தார்.
நான் ஏற்கனவே சொன்னேன்
My heart goes out to everyone affected by the major earthquake in Central Turkey.
— Frank Hoogerbeets (@hogrbe) February 6, 2023
As I stated earlier, sooner or later this would happen in this region, similar to the years 115 and 526. These earthquakes are always preceded by critical planetary geometry, as we had on 4-5 Feb.
ஆனால், அதை அப்போது பலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் டுவிட்டரில் மீண்டும் ஃப்ரான்க் பதிவிட்டு இருக்கிறார். "மத்திய துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களும் என் மனம் இருக்கிறது.
115 மற்றும் 526 வது ஆண்டுகளை போல் இப்பகுதியில் இதுபோன்ற நிலநடுக்கம் ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொன்னேன்." என்று பதிவிட்டு இருந்தார்.
இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இதனை அடுத்து பிரான்க் அடுத்தடுத்து புவியியல் சூழல் குறித்து வெளியிடும் கருத்துக்கள் உற்று நோக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது அவர் தெரிவித்து இருக்கும் தகவல் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், "ஒரு பெரும் அளவிலான நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக வந்து இந்திய பெருங்கடலில் முடிவடையும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால், எப்போது ஏற்படும் என்று அவர் குறிப்பிடவில்லை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
