ஒரே மேடையில் புடின், ஜின்பிங், மோடி..! இந்தியாவின் நிலைப்பாடு பகிரங்கம்
பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விரும்புகிறது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் சமர்கண்ட் நகரில் இடம்பெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
உலகம் கொவிட்-19 தொற்றை முறியடித்து வருகிறது. கொரோனா, உக்ரைன் - ரஷ்யா போரால் உலகளாவிய விநியோக சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விரும்புகிறது. ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்றார்.
இதேவேளை, 2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவத்திற்கு பின், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே மேடையில் புடின், ஜின்பிங், மோடி
அதே போல, உக்ரைன் - ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளுக்கு பின் ரஷ்ய அதிபரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச உள்ளார்.
2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் நிகழ்வுக்கு பின்பு, முதல் முறையாக சீன அதிபருடன் ஒரே மேடையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

