கொழும்பு செட்டித் தெரு கொள்ளை சம்பவம் : சந்தேக நபர்கள் கைது!

Colombo Sri Lanka Police Investigation Gold
By Eunice Ruth Jan 23, 2024 05:36 PM GMT
Report

கொழும்பு செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த தரப்பினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இவ்வாறாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் முச்சக்கரவண்டி சாரதி, அவரது உறவினர் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை சம்பவம்

செட்டித்தெரு தங்க நகை விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவரின் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளையிடப்பட்டன.

கொழும்பு செட்டித் தெரு கொள்ளை சம்பவம் : சந்தேக நபர்கள் கைது! | Sea Street Gold Foreign Currency Robbery Trending

குறித்த உரிமையாளருக்கு காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேலும் இரண்டு தங்க நகை விற்பனை நிலையங்கள் இருப்பதாகவும் அங்கிருந்து உருக்கிய தங்க கட்டிகள் கடந்த 11 ஆம் திகதி பேருந்து மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், குறித்த பேருந்தில் இருந்து தங்க கட்டிகள் அடங்கிய பொதியை செட்டித் தெருவில் உள்ள விற்பனை நிலையத்திற்கு கொண்டு வந்த ஊழியரை, முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் கடத்திச் செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

சந்தேக நபர்கள்

பின்னர், அவரிடம் இருந்த தங்கம் மற்றும் வௌிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்டு அவரை கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அருகே வீதியில் விட்டுச் சென்றுள்ளனர்.

கொழும்பு செட்டித் தெரு கொள்ளை சம்பவம் : சந்தேக நபர்கள் கைது! | Sea Street Gold Foreign Currency Robbery Trending

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் படி, புறக்கோட்டை காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிசிரிவி காட்சிகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் முச்சக்கர வண்டி சாரதி பல வருடங்களாக குறித்த பகுதியில் வாடகைக்கு முச்சக்கர வண்டிகளை ஓட்டி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகள்

செட்டித் தெரு பகுதியில் உள்ள தங்க நகை விற்பனை நிலைய ஊழியர்கள் பலமுறை பேருந்துகளில் தங்க கட்டிகள் அடங்கிய பொதிகளை எடுத்து வருவதை குறித்த சாரதி அவதானித்து வந்ததாக, முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொழும்பு செட்டித் தெரு கொள்ளை சம்பவம் : சந்தேக நபர்கள் கைது! | Sea Street Gold Foreign Currency Robbery Trending

சுமார் 19 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தரப்பினர் சமமாகப் பகிர்ந்ததோடு, திருடப்பட்ட தங்கத்தில் 92 கிராம் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயிடமும், முச்சக்கரவண்டி சாரதியின் வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு தொகை தங்கமும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026