பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய காவல்துறையினர் : தீவிரமடையும் விசாரணை!
தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளை பேணி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்களை அதிகரிப்பதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவு, காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் நடத்தை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
விசேட புலனாய்வுப் பிரிவு
இந்நிலையில், குறித்த விசாரணைகளை மேற்கொள்ள காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பிரிவுக்கு மேலதிக அதிகாரிகளை நியமித்து, புலனாய்வு அமைப்புகளுடன் நேரடித் தொடர்புகொள்ளத் தேவையான அனுமதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர்களின் தொலைபேசி தொடர்புகளைக் கண்காணிப்பதில், பல காவல்துறை அதிகாரிகள் அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த அதிகாரிகள் மீதான ஆரம்ப விசாரணைகளை இந்தப் பிரிவு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
