பிரான்ஸ் விமான தாங்கி போர்க்கப்பலை நோட்டமிட்ட இரகசிய ட்ரான்!
சுவீடனில் உள்ள மல்மோ துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டின் விமானம் தாங்கி போர்க்கப்பல் அருகே பறந்த ட்ரோன் தொடர்பில் அந்நாட்டு இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
வழக்கமான நேட்டோ நாடுகளின் பயிற்சிக்காக நிலை நிறுத்தப்பட்டுள்ள பிரான்ஸ் போர்க்கப்பல் அருகே குறித்த ட்ரோன் பறந்ததாக சுவீடன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே 4 வருடங்களை கடந்து போர் நடைபெறுகிறது. குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் ட்ரோன்கள்
இந்நிலையில் சில சந்தர்ப்பங்களில் அண்டை நாடுகளின் வான் பகுதிகளிலும் ரஷ்யாவின் ட்ரோன்கள் பறப்பதாக நேட்டோ உறுப்பினர் நாடுகளான டென்மார்க் போன்றவை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் சுவீடன் நாட்டில் உள்ள மல்மோ துறைமுகத்தில் பிரான்ஸ் நாட்டின் விமானம் தாங்கி போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கண்டறியப்பட்ட ட்ரோனை உடனடியாக சுட்டு வீழ்த்த சுவீடன் இராணுவம் தயாரான நிலையில் அது மாயமானதாக சுவீடன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனை சுவீடன் இராணுவம் ரஷ்யாவுக்கு சொந்தமானது என சந்தேகம் வெளியிட்டுள்ளது.
பால்டிக் கடலில் ரஷ்யாவின் போர்க்கப்பல் தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்து ட்ரோன் ஏவப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் சுவீடன், டென்மார்க் உடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |