கிழக்கு பல்கலையில் நடந்த இரகசிய நகர்வுகள் அம்பலம்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் (Eastern University, Sri Lanka) பேரவை உறுப்பினர்களில் 5 தமிழர்களும், 7 சிங்களவர்களும், 3 முஸ்லிம்களும் என இட்டு நிரப்பியுள்ளனர்.
அதாவது கோட்டாபய காலத்தில் 2 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 7ஆக அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தவிசாளரே காணப்படுகின்றார்.
அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதியாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண்மணியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்லோரும் இலங்கையர்கள் என்ற பெயரில் தேசிய மக்கள் சக்தி எல்லா விடயங்களிலும் நுட்பமாக சிங்கள மயமாதலை செய்து வருகின்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தருக்கான வெற்றிடம் வரும் நிலையில் தற்போதைய தொழில்நுட்ப பீட பீடாதிபதியும் சேவை மூப்பின் காரணமாக அந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
அவரை நியமிக்கும் பொறுப்பு பேரவை உறுப்பினர்களிடம் இருக்கின்ற நிலையில் அவர்களின் வாக்குகளால் குறித்த பெண்மணியும் போட்டியாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்படலாம்.
வரலாற்றில் முதற் தடவையாக ஒரு சிங்களவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்பட இருக்கின்றார்.
தேசிய மக்கள் சக்தி மிக நுட்பமாக திருகோணமலை மற்றும் அம்பாறையில் சிங்கள மயமாதலை செயற்படுத்தி வருகின்றது.
இது தொடர்பான மேலும் பல விடயங்களைப் பற்றி பேசுகின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
