அறிவிக்கப்பட்டது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்த இதனை அறிவித்துள்ளார்.
அறிவிப்பின் படி, குறித்த பரீட்சைக்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் ஏப்ரல் 4, 2025 முதல் ஏப்ரல் 30, 2025 வரை வரவேற்கப்படும்.
கடைசி திகதி
இதேவேளை, விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அரசுப் பாடசாலையிலோ அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலையிலோ தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மட்டுமே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
இந்த நிலையில், பரீட்சைக்கான விண்ணப்பம் தொடர்பான வழிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பெறலாம்.
மேலும், விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த வழிமுறைகள் அறிவுறுத்தல் தாளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள் - 011-2784537, 011-2786616, 011-2784208 011-2786200, 011-2784201
மின்னஞ்சல் முகவரி - http://gr5schexam@gmail.com
அவசர எண் - 1911
தொலைநகல் எண் - 011-2784422
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
