கூட்டமைப்பின் உறுப்பினர் மைத்திரியுடன் ரகசிய பேச்சு
meeting
secret
maithri
By Vanan
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் பிரத்தியேக இடமொன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த நிலையில், குறித்த நகரசபை உறுப்பினர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்றது. இதன் பின்னரே மைத்திரிபால சிறிசேனவை, சுமந்திரன் பிரத்தியேக இடமொன்றில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிய வருகின்றது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவுள்ளதாக சுதந்திரக் கட்சியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளிவந்துள்ளன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்