நாடாளுமன்ற தேர்தல் : களமிறக்கப்பட்டுள்ள காவல்துறை
பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுமார் 64,000 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
காவல்துறை பாதுகாப்பு
மொத்தமுள்ள 13,314 தொகுதிகளுக்கு 13,383 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் நாளிலும், அதற்கு மறுநாளிலும், தேவைப்பட்டால், அதற்குப் பின்னரும் காவல்துறை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவுள்ளோம்.
கிட்டத்தட்ட 64,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். , காவல்துறை விசேட அதிரடிப்படையின் 3,200 உத்தியோகத்தர்கள் கடமைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளனர் 12,227 சிவில் பாதுகாப்பு படையினர் நேரடியாக தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 70,000 காவல்துறையினர் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
தயார் நிலையில் இராணுவத்தினர்
மேலும், சுமார் 11,000 இராணுவத்தினர் தேவைப்படும் பட்சத்தில் அழைப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தலை நடத்துவதற்கு ஆதரவை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |