ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பு: காவல்துறை மா அதிபர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு காவல்துறை மா அதிபர்களை அழைத்து இன்று (2) தொடர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
காவல்துறை தலைமையகத்தின் நிர்வாக விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் (செயல்திறன்) லலித் பதிநாயக்க மற்றும் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை பரிசோதகர்கள் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, எதிர்வரும் தேர்தலுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் கொழும்பு ராஜகிரிய தேர்தல் செயலகத்திற்கு தேவையானஉதவிகளை வழங்குமாறு காவல்துறை மா அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
தேர்தல் விவகாரங்கள்
ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்புக்காக அதிகாரிகளை அனுப்புவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், பிரதி தேர்தல்கள் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (3) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் படி, ராஜகிரிய தேர்தல் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |