தமிழகத்தில் அதிரடி காட்டும் சீமான்
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தேர்வில் பிற அரசியல் கட்சிகள் மும்முரமாக வேலைப் பார்த்து வருகையில், முதல் கட்சியாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்துகிறார் சீமான்.
தனித்தொகுதிகளில் ஆதித்தொல் குடிகளை நிறுத்தியதோடு மட்டுமல்லாது, இதுவரை தேர்தல் அரசியலில் ஒதுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட தமிழ்ச்சமூகங்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தந்தது நாம் தமிழர் கட்சி. பாலியல் சிறுபான்மையினரான திருநங்கையைத் தேர்தல் களத்தில் நிறுத்தியது.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலிலும் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் வேட்பாளர்களாக களமிறக்கியது நாம் தமிழர் கட்சி. இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், வருகிற மார்ச் 7 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 3 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடலில் நடைபெறுகிறது.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்