அதிகாரத்தை இழந்த கோட்டாபய - உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
சீனக்குடா எண்ணெய் தாங்கி பண்ணையை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக லங்கா ஐஓசி உடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அதிகாரம் வழங்கிய அமைச்சரவை பத்திரத்தின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை, எல்லே குணவன்ச தேரர், பெங்கமுவே நாலக தேரர் மற்றும் வக்முல்லே உதித்த தேரர் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை எண்ணெய் தாங்கி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்று வழங்கிய அனுமதி

மனுதாரர்கள் சார்பில் நேற்று முன்னிலையான சட்டத்தரணி தர்ஷன வெரதுவகே, மனுக்களை திருத்த நீதிமன்றத்தின் அனுமதியை கோரிய நிலையிலேயே நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிபராக பதவி வகிக்காத காரணத்தினால் அவரை தனிப்பட்ட முறையில் பிரதிவாதியாக சேர்க்க நீதிமன்றில் சட்டத்தரணி அனுமதி கோரியிருந்த நிலையில், நீதியரசர்கள் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.
கோட்டாபயவை பிரதிவாதியாக சேர்க்க அனுமதி

அத்துடன் இந்த மனுக்கள் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்