சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனம் தனியாருக்கு விற்பனை : சொத்து கணக்கிடும் பணி ஆரம்பம்
                                    
                    Colombo
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    சிறிலங்கா தொலைத் தொடர்பு நிறுவனத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான சொத்து எண்ணிக்கை கணக்கிடும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனமொன்றினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்தார்.
கடுமையான தொழில்சார் நடவடிக்கை
இந்த நிலைமையை தடுக்க எதிர்வரும் நாட்களில் கடுமையான தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியுடன் தொடர்புடைய நிறுவனம்
உலக வங்கியுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூலம் இந்நிறுவனத்தின் பெறுமதி கணக்கிடப்படுவதாகத் தெரிவித்த அவர், தனியாருக்கு கடன் வழங்குவதே இந்த நிறுவனத்தின் பொறுப்பாகும் என்றார்.

இது மிகப் பெரிய மோசடி என்றும், இதற்கு எதிராக கடுமையான தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்