அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்ற உணவகத்திற்கு அபராதம்
உணவகம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு, அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 750,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் விசாரணை
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் 750,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகளால் கடந்த ஜூன் 4 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த அத்துமீறல் கண்டறியப்பட்டது.
இதன்போது அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாக குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லிட்டர் குடிநீர்ப் போத்தலை, உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26